பிரேசில் Know Out - மைதானத்தில் கதறி அழுத நெய்மார்... - சர்வதேச போட்டிக்கு முழுக்கு? - ரசிகர்கள் ஷாக்

Football Viral Video FIFA World Cup Qatar 2022 Neymar
By Nandhini Dec 11, 2022 07:59 AM GMT
Report

சர்வதேச போட்டிக்கு முழுக்கு போடுவதாக பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் சூசகமாக தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கால்பந்து தொடர் -

4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகின்றன.

பிரேசில் Know Out

நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில், 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில் அணி கால் இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் கூடுதல் நேரத்தில் 105-வது நிமிடத்தில் நெய்மார் கோல் அடித்த பிறகு, மேற்கொண்டு 15 நிமிடங்கள் தடுப்பாட்டத்தில் கச்சிதமாக ஈடுபட்டிருந்தால் பிரேசில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும்.

ஆனால் பின்கள தற்காப்பில் கோட்டை விட, 117-வது நிமிடத்தில் குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தார். பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசில் வீரர்கள் ரோட்ரிகோ, மர்கியூனோஸ் ஆகியோர் வாய்ப்பை வீணடித்தனர்.

இதனையடுத்து, குரோஷியா 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

fifa-world-cup-2022-foot-ball-neymar-crying

கதறி அழுத நெய்மார்

தோல்வியின் வேதனை தாங்க முடியாமல் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் மைதானத்திலேயே உட்கார்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். நெய்மாரை சக வீரர்கள் தேற்றினார்கள்.

தோல்வியை தழுவினாலும் பிரேசில் வீரர்களில் அதிக கோல் அடித்தவ ஜாம்பவான் பீலேவின் சாதனையை (77 கோல்) சமன் செய்தது மட்டுமே நெய்மாருக்கு கிடைத்த ஒரே ஒரு ஆறுதல். 3-வது முறையாக உலகக் கோப்பையில் கால்பதித்த நெய்மாருக்கு இந்த தடவையும் சோகமே மிஞ்சியது.

சர்வதேச போட்டிக்கு முழுக்கு?

இதனையடுத்து, இது குறித்து பேசிய நெய்மார், 'தேசிய அணியில் மீண்டும் விளையாடுவதற்கான கதவை நான் முழுமையாக சாத்தி விடவில்லை. ஆனால் மீண்டும் பிரேசிலுக்காக விளையாடுவேனா என்பதில் 100 சதவீதம் உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை. அணிக்கும், எனக்கும் எது நல்லது என்பது பற்றி நான் கொஞ்சம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.