உலக கோப்பை கால்பந்து தொடர் - கத்தாரை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி...!
உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கத்தாரை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது.
இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.
இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
கத்தாரை வீழ்த்திய நெதர்லாந்து
உலக கோப்பை கால்பந்து போட்டியில், நேற்று அல் பேட் ஸ்டேடியத்தில் 'எ' பிரிவு லீக் ஆட்டத்தில் கத்தார் அணியும், நெதர்லாந்து அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இப்போட்டியின் முடிவில் கத்தாரை நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. மூன்று ஆட்டங்களில் தனது மூன்றாவது கோலைப் பதிவு செய்து, குரூப் ஏ பிரிவில் முதலிடத்தைப் பெற்று நாக் அவுட் சுற்றுக்கு நெதர்லாந்து அணி முன்னேறியுள்ளது.
Netherlands beat Qatar 2-0. Qatar is the first host country who couldn't won any match.
— ?⚽️ #FIFAWorldCup Live (@plstreaminglive) November 29, 2022
Qatar ?? worst host on and off the field #WorldCup history.#ECUSEN #NEDQAT #WorldCup #Qatar2022 #FIFAWorldCup
?: @OnsOranje pic.twitter.com/53VEGO9T49
IT’S ALL OVER IN GROUP A!
— Plei ⚽️ (@PleiApp) November 29, 2022
Netherlands beat Qatar 2-0 to win the group with ease ??
Meanwhile, Ecuador could not find the goal they needed to advance, as they fell to Senegal 2-1 ?
The Lions of Teranga advance in 2nd place! ??#NED #QAT #ECU #SEN #FIFAWorldCup #Qatar2022 pic.twitter.com/H3bwKIY1fa