உலக கோப்பை கால்பந்து - மொரோக்கோ - குரோஷியா அணிகளின் ஆட்டம் டிரா...!
உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொரோக்கோ - குரோஷியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது.
கால்பந்து உலக கோப்பை தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.
உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
மொரோக்கோ - குரோஷியா அணி ஆட்டம் 'டிரா'
இன்று 'எப்' பிரிவில் நடைபெற்ற போட்டியில் மொரோக்கோ - குரோஷியா அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் இரு அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே கோல் அடிக்க கடுமையாக போராடினர்.
இருப்பினும் இரு அணிகளின் கோல் கீப்பர்களான டொமினிக் லிவகோவிக் (குரோஷியா) மற்றும் யாசின் பௌநோ (மொரோக்கோ) தங்களது எதிரணி வீரர்களின் கோல் முயற்சியை பலமுறை அற்புதமாக தடுத்து நிறுத்தினர். இதனால் முதல் பாதியில் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, 2-வது பாதியிலும் இரு அணி வீரர்களும் இறுதி வரை கோல் அடிக்கவே இல்லை. இதனையடுத்து, தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் போட்டி மிகுந்த பரபரப்பாக நடந்தது.
அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இப்போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
