உலகக் கோப்பைக்கு விடைபெறுவது மிகவும் வேதனை அளிக்கிறது - லூயிஸ் சுவாரஸ் உருக்கம்...!

Football FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 03, 2022 07:03 AM GMT
Report

உலகக் கோப்பைக்கு விடைபெறுவது மிகவும் வேதனை அளிக்கிறது என்று லூயிஸ் சுவாரஸ் உருக்கமாக டுவிட் செய்துள்ளார்.

இத்தாலி அணியின் வீரர் ஒருவரை கடித்த லூயிஸ்

2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது இத்தாலி அணியின் வீரர் ஒருவரை கடித்தார் என்கிற குற்றச்சாட்டில் ஃபிஃபாவால் உருகுவே அணி வீரர் லூயிஸ் சுவாரஸு தண்டனை விதிக்கப்பட்டது. எதிரணி வீரரைக் கடித்ததால் சுவாரஸுக்கு 4 மாதங்களுக்கு கால்பந்து விளையாட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், 9 சர்வதேசப் போட்டிகளில் விளையாடக் கூடாது என்றும் ஃபிஃபா அறிவித்தது.

உருகுவே அணி நிர்வாகமும், சுவாரசும், தண்டனை குறைப்புக்காக ஃபிஃபாவிடம் வேண்டுகோள் விடுத்தது. மேலும் கடித்ததற்காக சுவாரஸ் மன்னிப்பும் கேட்டார். கடிபட்ட வீரரும், சுவாரசுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை கொஞ்சம் அதிகம்தான் என்று ஆதங்கம் வெளியிட்டார்.

இதனையடுத்து, லூயிஸ் சுவாரஸ் தண்டனை காலம் முடிவடைந்தது. இந்த ஆண்டு உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் நீண்ட நாட்களுக்குப் பிறகு, கால்பந்து பயிற்சியில் இறங்கினார். பார்சிலோனா அணியுடன் முதல் முறையாக இணைந்து அவர் பயிற்சி மேற்கொண்டார்.

fifa-world-cup-2022-foot-ball-luis-suarez

கண்ணீருடன் விடைபெற்றார்

லூயிஸ் சுவாரஸ் பரம எதிரியான கானா அணியை வீழ்த்தியும் அடுத்த சுற்றுக்கு உருகுவே அணியால் முன்னேற முடியாததால், மூத்த வீரர் சுவாரஸ் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு கதறினார்.

சுவாரஸ்-க்கு இது கடைசி உலகக்கோப்பை போட்டியாகும். ஆனந்த கண்ணீர் இருந்தும் 2 முறை சாம்பியனான உருகுவே அணியும், கானா அணியும் உலகக்கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

தற்போது லூயிஸ் சுவாரஸ் கண்ணீர் விட்டு கதறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

லூயிஸ் சுவாரஸ் உருக்கம்

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், உலகக் கோப்பைக்கு விடைபெறுவது மிகவும் வேதனை அளிக்கிறது, ஆனால் நம் நாட்டிற்காக எல்லாவற்றையும் விட்டுவிடுகிறோம் என்ற மன அமைதி உள்ளது. அவர்கள் எங்களை மதிக்காவிட்டாலும் உருகுவேயன் என்பதில் பெருமை கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.