உலக கோப்பையிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றார் லூயிஸ் சுரேஸ்...! ரசிகர்கள் சோகம்..!

Football FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 03, 2022 07:16 AM GMT
Report

உலக கோப்பையிலிருந்து கண்ணீருடன் லூயிஸ் சுரேஸ் விடைபெற்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலக கோப்பை கால்பந்து தொடர் -

4வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

கானாவை வீழ்த்திய உருகுவே

நேற்று இரவு உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் H பிரிவில் கானா அணியும், உருகுவே அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

நேற்று நடைபெற்ற பரபரப்பான இந்த ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் உருகுவே அணியின் ஜியார்ஜியன் முதல் கோல் அடித்து அசத்தினார். இதனால், உருகுவே அணி முன்னிலை பெற, 32வது நிமிடத்தில் 2வது கோலை அடித்தது.

இதையும் ஜியார்ஜியனே அடித்து அசத்தினார். இந்த இரு கோல்களுக்கும் உருகுவே அணியின் சீனியர் வீரரான சுவாரஸ் அசிஸ்ட் செய்திருந்தார்.

இதனையடுத்து உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் H பிரிவில் கானா அணி 0 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே வெற்றி பெற்றது.

இத்தாலி அணியின் வீரர் ஒருவரை கடித்த லூயிஸ்

2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது இத்தாலி அணியின் வீரர் ஒருவரை கடித்தார் என்கிற குற்றச்சாட்டில் ஃபிஃபாவால் உருகுவே அணி வீரர் லூயிஸ் சுவாரஸு தண்டனை விதிக்கப்பட்டது.

எதிரணி வீரரைக் கடித்ததால் சுவாரஸுக்கு 4 மாதங்களுக்கு கால்பந்து விளையாட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், 9 சர்வதேசப் போட்டிகளில் விளையாடக் கூடாது என்றும் ஃபிஃபா அறிவித்தது. உருகுவே அணி நிர்வாகமும், சுவாரசும், தண்டனை குறைப்புக்காக ஃபிஃபாவிடம் வேண்டுகோள் விடுத்தது.

மேலும் கடித்ததற்காக சுவாரஸ் மன்னிப்பும் கேட்டார். கடிபட்ட வீரரும், சுவாரசுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை கொஞ்சம் அதிகம்தான் என்று ஆதங்கம் வெளியிட்டார். இதனையடுத்து, லூயிஸ் சுவாரஸ் தண்டனை காலம் முடிவடைந்தது.

இந்த ஆண்டு உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் நீண்ட நாட்களுக்குப் பிறகு, கால்பந்து பயிற்சியில் இறங்கினார். பார்சிலோனா அணியுடன் முதல் முறையாக இணைந்து அவர் பயிற்சி மேற்கொண்டார். 

fifa-world-cup-2022-foot-ball-luis-suarez

கண்ணீருடன் விடைபெற்றார் லூயிஸ் சுவாரஸ்

பரம எதிரியான கானா அணியை வீழ்த்தியும் அடுத்த சுற்றுக்கு உருகுவே அணியால் முன்னேற முடியாததால், மூத்த வீரர் சுவாரஸ் மைதானத்திலேயே கண்ணீர்விட்டு கதறினார். சுவாரஸ்-க்கு இது கடைசி உலகக்கோப்பை போட்டியாகும்.

ஆனந்த கண்ணீர் இருந்தும் 2 முறை சாம்பியனான உருகுவே அணியும், கானா அணியும் உலகக்கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

தற்போது லூயிஸ் சுவாரஸ் கண்ணீர் விட்டு கதறிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.