அந்த மனிதரைப் பார்த்ததும் வலியோடு இறுக்கமாக கட்டியணைத்த மெஸ்ஸி... - கண்கள் குளமாகும் வீடியோ வைரல்...!
பயிற்சிவிப்பாளர் லயனல் ஸ்கலோனியை பார்த்ததும் கட்டியணைத்த மெஸ்ஸியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகிறது.
குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா -
நேற்று முன்தினம் நள்ளிரவு லுசைஸ் ஐகானிக் மைதானத்தில் முதலாவது அரைஇறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த இரு அணிகளும் பயங்கரமான பலத்துடன் மல்லுக்கட்டி விளையாடின. இதனால் களத்தில் அனல் பறந்தது. இந்த பரப்பான ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி மாபெரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
பயிற்றுவிப்பாளர் ஸ்கலோனி கட்டியணைத்த மெஸ்ஸி
சமூகவலைத்தளங்களில் பயிற்றுவிப்பாளர் ஸ்கலோனி கட்டியணைத்த மெஸ்ஸியின் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வெற்றி மகிழ்ச்சியில் சக வீரர்கள் அனைவரும் மைதானத்தில் கொண்டாடிக் கொண்டியிருக்கும் தருவாயில், பயிற்றுவிப்பாளர் ஸ்காலனியிடம் வந்த மெஸ்ஸி அவரை கட்டியணைத்தார். அப்போது, மெஸ்ஸியை இறுக்கமாக கட்டியணைத்த ஸ்கலோனி கண்கலங்கினார். ஒரு நொடி அந்த கட்டியணைப்பில் இருவரது வலிகளில் எவ்வளவு ஆறுதல் உள்ளது என்பதை பார்ப்பவர்களால் உணர முடிந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உங்களுடைய வலி நிறைந்த கண்ணீர் வீண் போகாது.. கண்டிப்பாக உலக கோப்பையை நீங்கள் வெல்வீர்கள் என்று வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
The hug of two Lionel from yesterday with Messi telling Scaloni everything is because of him. Scaloni, tears in his eyes. ❤️pic.twitter.com/9t5MaELktn
— All About Argentina ??? (@AlbicelesteTalk) December 14, 2022