மெஸ்ஸிக்கு காயம்...? - இறுதிப்போட்டியில் கலந்து கொள்வாரா...? அதிர்ச்சியில் ரசிகர்கள்...!

Lionel Messi Football FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 17, 2022 07:14 AM GMT
Report

மெஸ்ஸிக்கு காயமா? அவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

உலக கோப்பை கால்பந்து தொடர் -

4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வந்தது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணி நுழைந்துள்ளது.

fifa-world-cup-2022-foot-ball-lionel-messi

மெஸ்ஸிக்கு காயம்...? 

உலக மக்கள் எதிர்பார்த்த உலகக் கோப்பை கால்பந்து - 2022 போட்டியில் இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் நாளை கோதாவில் நேருக்கு நேர் மோத உள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்றில் 3-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இதனால், நாளை நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் களத்தில் அனல் தெறிக்க உள்ளது. கத்தாரில் மைதானத்தில் உள்ள அனைவரின் பார்வையும் லயோனல் மெஸ்ஸி மீது மட்டுமே விழ உள்ளது.

இந்நிலையில், குரோஷியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அவருக்கு பல முறை தொடை தசையைப் பிடித்தது. இதனால் அவர் சிரமப்பட்டு விளையாடினார். இருந்தாலும் சிறப்பாகவே விளையாடி அணியை வெற்றிப்பெறச் செய்தார். 

இந்நிலையில், கடந்த வியாழன் அன்று மெஸ்ஸி பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் மெஸ்ஸி காயப்பட்டாரா? என்று அதிர்ச்சி அடைந்து ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நாளை பிரான்ஸுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெற உள்ளதால், அர்ஜென்டினா ரசிகர்கள் மெஸ்ஸியின் உடற்தகுதி குறித்து அதிக அளவில் கவலைப்பட்டு வருகின்றனர்.

ஆனால், பயிற்சிவிப்பாளர் லியோனல் ஸ்கலோனி அரையிறுதி போட்டியில் கடுமையாக விளையாடியதால் அனைத்து வீரர்களுக்கும் ஓய்வு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இத்தகவல் வெளியானதால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.