அர்ஜென்டினா வெற்றி - பியூனஸ் அயர்ஸ் தெருவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டு கொண்டாட்டம்...!
இறுதிப் போட்க்குள் நுழைந்துள்ள அர்ஜென்டினா வெற்றியை ரசிகர்கள் ஒன்று திரண்டு கொண்டாடி வருகின்றனர்.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகிறது.
குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா -
நேற்று நள்ளிரவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி மாபெரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணியின் வெற்றியை பியூனஸ் அயர்ஸ் தெருக்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Messi Magic, The streets of Buenos Aires were booming when Argentina secured their spot in the World Cup Final!? pic.twitter.com/IdEfZi8E0Z
— Dhruv Solanki (@DHRUV_1696) December 14, 2022