மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் - உருக்கமாக மன்னிப்பு கேட்ட குத்துச்சண்டை வீரர்...!

Lionel Messi Football FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 01, 2022 07:50 AM GMT
Report

மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல் விடுத்த குத்துச்சண்டை வீரர் உருக்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மெக்சிகோவை வீழ்த்திய அர்ஜெண்டீனா

சமீபத்தில் லுசைல் மைதானத்தில் 'சி' பிரிவில், அர்ஜெண்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் நேருக்கு நேர் மோதின. போட்டி தொடங்கியதிலிருந்து பரபரப்பாக காணப்பட்டது.

இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அப்போது, திடீரென அர்ஜென்டிணா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அபாரமாக அசத்தினார். இதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கார்னர் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக 2-வது கோலை அடித்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து, அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.

மெஸ்ஸிக்கு கொலை மிரட்டல்

இந்த வெற்றிக்கு பிறகு உடைமாற்றும் அறையில் வீரர்கள் பாட்டு பாடி, நடனம் ஆடி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

அப்போது, மெஸ்ஸி செய்த காரியம் மெக்சிகோவின் குத்து சண்டை வீரர் கேனலோ ஆல்வாரெஜ்ஜுக்கு ஆத்திரம் கிளப்பி இருக்கிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நமது ஜெர்சியை பயன்படுத்தி மெஸ்ஸி தரையை துடைத்திருக்கிறார்.

இதனை பார்த்தீர்களா நண்பர்களே? மெஸ்ஸியை நான் எங்கேயாவது பார்த்தேன் என்றால், அவரை வாகனம் ஏற்றி கொலை விடவேண்டாம் என்று அவர் கடவுளிடம் வேண்டி கொள்ளட்டும். மெஸ்சியின் அந்தஸ்துக்கு அவர், மெக்சிகோவின் கொடி மற்றும் சட்டையை மதிக்க வேண்டும்.

அர்ஜென்டினாவை நான் மதிப்பதுபோல், மெக்சிகோவை அவர் மதிக்க வேண்டும் என்று மிரட்டலாக பதிவிட்டார். இவரின் இந்தப் பதிவிற்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வந்தனர்.

fifa-world-cup-2022-foot-ball-lionel-messi

மன்னிப்புக் கேட்ட கேனலோ ஆல்வாரெஜ்

இந்நிலையில், குத்து சண்டை வீரர் கேனலோ ஆல்வாரெஜ், மெஸ்ஸியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், கடந்த சில நாட்களாக நான் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்பும் இடமில்லாத கருத்துகளால் நான் ஏமாற்றமடைந்தேன். ஒவ்வொரு நாளும் நாம் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கிறோம், இந்த முறை இது என் முறை என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.