What a goal... உலக கால்பந்து ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த அசத்தல் கோல் - வைரலாகும் வீடியோ
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்த அசத்தல் வீடியோ வைரலாகி வருகிறது.
உலக கால்பந்து தொடர் -
4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
மெக்சிகோவை வீழ்த்திய அர்ஜெண்டீனா
நேற்று நள்ளிரவில் லுசைல் மைதானத்தில் 'சி' பிரிவில், அர்ஜெண்டினா மற்றும் மெக்சிகோ அணிகள் நேருக்கு நேர் மோதின.
போட்டி தொடங்கியதிலிருந்து பரபரப்பாக காணப்பட்டது. இப்போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அப்போது, திடீரென அர்ஜென்டிணா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்து அபாரமாக அசத்தினார். இதனைத்தொடர்ந்து ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் மெக்சிகோ அணிக்கு கார்னர் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை அர்ஜென்டினா வீரர்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதனையடுத்து ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணியின் பெர்னான்டெஸ், தனது அணிக்காக 2-வது கோலை அடித்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து, அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
மெஸ்ஸி அசத்தலான கோல்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி ஆட்டத்தின் 64 வது நிமிடத்தில் கோல் அடித்த அசத்தல் வீடியோ வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
VAMOS ARGENTINA ?? #Messi & Fernandez keep #Argentina alive , to fight another day .
— Glen12 ?? (@BourbonNscotch) November 27, 2022
?? 2 - ??0#FifaWorldCup #Qatar2022#ARGMEX pic.twitter.com/thqY4pZroQ

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
