என் மனம் வலிக்கிறது....! உலக கோப்பை கால்பந்து தோல்வி குறித்து மெஸ்ஸி உருக்கம்

Lionel Messi Football FIFA World Cup Qatar 2022
By Nandhini 3 மாதங்கள் முன்

என் மனம் வலிக்கிறது என்று உலக கோப்பை கால்பந்து தோல்வி குறித்து மெஸ்ஸி உருக்கமாக பேசியுள்ளார்.

கால்பந்து உலக கோப்பை தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா

இந்நிலையில், பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த அர்ஜெண்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் நேற்று நேருக்கு நேர் மோதின.

இந்த ஆட்டம் தொடங்கியதும், அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினார்கள். ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது.

இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடயும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்து வந்தது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலித்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தார்கள்.

இதனால் இப்போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பிறகு பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியாமல் போனது. இப்போட்டியின் முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.

fifa-world-cup-2022-foot-ball-lionel-messi

லியோனல் மெஸ்ஸி உருக்கம்

இந்நிலையில், தோல்வி குறித்து அர்ஜென்டினா கேப்டனான மெஸ்ஸி பேசுகையில், சவுதி அரேபியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய அடியாகும். இந்த தோல்வியால் என் மனம் வலிக்கிறது.

சவுதி அரேபியா நல்ல வீரர்களை கொண்ட அணி என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் பந்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள். நாங்கள் அனைவரும் முன்பை விட ஒருங்கிணைந்து விளையாடினோம். இத்தோல்வியிலிருந்து நிச்சயம் மீண்டு வருவோம். மெக்சிகோவை வீழ்த்த முயற்சி செய்வோம் என்றார்.   

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.