உலக கோப்பை கல்பந்து போட்டியில் பிரான்ஸ் தோல்வி... - உருக்கமாக பதிவிட்ட எம்பாப்பே - ரசிகர்கள் சோகம்...!
உலக கோப்பை கல்பந்து போட்டியில் பிரான்ஸ் தோல்வியதையடுத்து, எம்பாப்பே உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்த பிரான்ஸ்
நேற்று நடைபெற்ற உலககோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியின் மோசமான முதல் பாதியிலிருந்து அந்த அணியை இரண்டாம் பாதியில் மீட்டு வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றதே எம்பாபேதான். 2ம் பாதியில் 80 நிமிடங்களுக்கு பின் இவர் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்தது உலக ரசிகர்களை திரும்ப பார்க்க வைத்தார். இதுதான் ஆட்டத்தின் தீர்ப்பு முனையாக அமைந்தது.
2 கோல்கள் அதுவரை அர்ஜெடினா 2 கோல்களில் முன்னிலை வகித்த நிலையில், பிரான்ஸ் அணியை மீண்டும் மெயின் சீட்டில் அமர வைத்தது எம்பாபேதான். அதன்பின் கூடுதல் டைமில் அர்ஜென்டினா கூடுதலாக ஒரு கோல் போட, மீண்டும் எம்பாபே ஹாட் டிரிக் கோல் போட்டு ஆட்டத்தை எக்ஸ்ட்ரா டைமிலும் சமன் செய்து முடித்தார்.
அதன்பின் பெனால்டி சூட் அவுட்டிலும் கூட எம்பாபேதான் 4 கோல்களை போட்டார். தனது அணியை எப்படியாவது வெற்றிபெற வைக்க வேண்டும் என்று இவர் நேற்று கடுமையாக போராடினார். ஆனால், அதிக தகுதி படைத்த அணியான அர்ஜென்டினா உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
உருக்கமாக பதிவிட்ட எம்பாப்பே
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் எம்பாப்பே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "நாங்கள் திரும்பி வருவோம்" என்று கிலியன் எம்பாப்பே பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு இந்தி நடிகர் ரன்வீர் சிங் கருத்து தெரிவிக்கையில், "நீங்கள் ஒரு போர்வீரன், கிலியன் இது இப்போது உங்கள் நேரம். என்று பதிவிட்டுள்ளார். அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடி வரும் ரசிகர்கள், மறுபக்கத்தில் எம்பாப்பேயின் திறமையையும் பாராட்டி, வாழ்த்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.