உலக கோப்பை கால்பந்து: மைதானத்தில் "Kill, kill Albanians..." - ரசிகர்கள் திடீர் கோஷத்தால் பரபரப்பு...!
உலக கோப்பை கால்பந்து போட்டி மைதானத்தில் "Kill, kill Albanians..." என்று ரசிகர்கள் திடீரென கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
செர்பியா அணியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து -
நேற்று இரவு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் G பிரிவில் செர்பியா அணி, சுவிட்சர்லாந்து அணி நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இப்போட்டியின் முடிவில், 3 - 2 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு சுவிட்சர்லாந்து சென்றது.
கோஷமிட்ட ரசிகர்களால் பரபரப்பு -
செர்பியா அணி, சுவிட்சர்லாந்து அணி பரபரப்பாக களத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென "அல்பேனியர்களைக் கொல்லுங்கள், கொல்லுங்கள், கொல்லுங்கள்" என்று ரசிகர்கள் கோஷமிட்டனர்.
இதனால், மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு காவலர்கள் ஓடி வந்து கோஷமிட்டவர்களை சமாதானப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Serbia fans chanting "Kill, kill, kill Albanians" during the #Switzerland vs #Serbia match. @FIFAcom @FIFAWorldCup
— Kosovar Football ?? (@kosovarfootball) December 2, 2022
https://t.co/I4z7ntEEfb…
pic.twitter.com/yTLll893Wb