உலகக்கோப்பை கால்பந்து : ஈரானை வீழ்த்தி அமெரிக்க அபார வெற்றி...!
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஈரானை வீழ்த்தி அமெரிக்க அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடர்
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது.
இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.
இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
ஈரானை வீழ்த்தி அமெரிக்கா வெற்றி
நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள அல் துமாமா மைதானத்தில் 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் அமெரிக்கா - ஈரான் அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் கோல் அடிப்பதற்கு இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த சூழலில் ஆட்டத்தின் முதல் பாதியின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.
ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் போட்டியை சமன் செய்ய ஈரான் வீரர்களின் கடும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், இறுதிவரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
இதனையடுத்து, இப்போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
Pulisic’s MOTM World Cup performance vs. Iran ??
— American Hooligans ??⚽️ (@AmericanHoolis) November 29, 2022
(?: @BSTComps)
pic.twitter.com/CVuWwhyRuq
Christian Pulisic's goal gives #USA the lead at the break ?#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) November 29, 2022

Ethirneechal: விஷமருந்தி உயிருக்கு போராடும் விசாலாட்சி... கதறி துடிக்கும் குடும்பம்! சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் Manithan
