What a goal..! இணையதளத்தில் வைரலாகும் மாஸ் வீடியோ

Football Viral Video FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 02, 2022 07:34 AM GMT
Report

உலக கோப்பை கால்பந்து தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது.

இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

fifa-world-cup-2022-foot-ball-germany-costa-rica

கோஸ்டாரிகாவை வீழ்த்திய ஜெர்மனி

நேற்று இரவு தோகாவில் உள்ள அல் பைட் மைதானத்தில் நடைபெற்ற 'இ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியின் முடிவில் கோஸ்டாரிகாவை 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வீழ்த்திய அபாரமாக வெற்றி பெற்றது.

what a goal - வைரலாகும் வீடியோ

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நேற்று நடைபெற்ற ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அடித்த கோல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் What a Goal என்று பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.