Wow... உலகக்கோப்பை கால்பந்து : இங்கிலாந்தை வீழ்த்து அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்..! குஷியில் ரசிகர்கள்...!

Football France England FIFA World Cup Qatar 2022
By Nandhini Dec 11, 2022 07:24 AM GMT
Report

உலக கோப்பை கால்பந்து தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.

கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகின்றன.

fifa-world-cup-2022-foot-ball-france-england

அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்

நேற்று நள்ளிரவு அல்பைட் மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - பிரான்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின.

இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக துவங்கியது. முதல் பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வீரர் சொளமெனி 17- வது நிமிடத்தில் தன் முதல் கோலை அடித்து அசத்தினார்.

இதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி முன்னிலை வகித்தது. இதனையடுத்து, 2-வது பாதியில் மைதானத்தில் அனல் பறந்தது.

ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹேரி கேன் முதல் கோலை அடித்து போட்டியை சமன் செய்தார்.

மிகவும் பரபரப்பாக சென்ற இப்போட்டியின் ஆட்டத்தில் 78-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ஒலிவர் கிரெளடு அணிக்கான 2வது கோலை அடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். இப்போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.