Dont miss it...- முதல் அரையிறுதியில் குரோஷியா -அர்ஜென்டினா அணிகள் நேருக்குநேர் மோதல்...!

Football Argentina FIFA World Cup Qatar 2022 Croatia
By Nandhini Dec 13, 2022 06:19 AM GMT
Report

இன்று உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் அரையிறுதியில் குரோஷியா, அர்ஜென்டினா அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.

உலக கோப்பை கால்பந்து தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகின்றன.

fifa-world-cup-2022-foot-ball-croatia-argentina

குரோஷியா, அர்ஜென்டினா நேருக்கு நேர் மோதல்

இன்று உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதல் அரையிறுதியில் குரோஷியா, அர்ஜென்டினா அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளன.

முதல் அரையிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு லுசாய்ல் மைதானத்தில் களைகட்ட இருக்கிறது. லியோனல் மெஸ்ஸி கால்பந்து உலகத்தின் தன் வாழ்க்கையை சரியான முடிப்பதற்கான பயணத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க முயற்சிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

2022ம் ஆண்டின் லியோ மெஸ்ஸியின் தருணம் மீண்டும் வந்துவிட்டது. சவூதி அரேபியாவுக்கு எதிராக ஆரம்ப தோல்வியடைந்தாலும், மெஸ்ஸி தனது அணி வலுவாக திரும்பும் என்று சபதம் செய்தார்.

அவரது 4 கோல்கள் மற்றும் 2 அசிஸ்டுகள் அர்ஜென்டினாவை மகத்துவத்தின் விளிம்பில் வைத்திருக்கின்றன, 3வது உலகக் கோப்பை பட்டத்திற்கு 2 வெற்றிகள் உள்ளன.

ஆரம்பத்தில் நிதானமாகவும், கூடுதல் நேரத்தில் நிதானத்துடன் கூடிய அதிரடிக்கும் கைதேர்ந்த குரோஷிய அணி 2வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய காத்துக்கொண்டிருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்புடனும், அனல் தெறிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.