உலக கோப்பை கால்பந்து : பெல்ஜியத்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறை - பரபரப்பு சம்பவம்

Viral Video Belgium FIFA World Cup Qatar 2022
By Nandhini Nov 28, 2022 09:44 AM GMT
Report

உலக கோப்பை கால்பந்து தொடரில் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத பெல்ஜியத்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.

பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றி குரூப் F பிரிவில் நேற்று பெல்ஜியம், மொராக்கோ அணி நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றி அடைந்தது.

பெல்ஜியத்தின் இந்த தோல்வி ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனையடுத்து, ஆத்திரமடைந்த பெல்ஜியத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

fifa-world-cup-2022-foot-ball-belgium

பெல்ஜியம் ரசிகர்கள் வன்முறை

பெல்ஜியம் தலைநகர் பிரெசில்சில் கால்பந்து ரசிகர்கள் மொரோக்கோ கொடியை தீவைத்து கொழுத்தினார்கள்.

மேலும், கார்கள், பைக்குகளை தீ வைத்து கொளுத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.