உலக கோப்பை கால்பந்து - போலந்தை வீழ்த்தி அர்ஜென்டினா அமோக வெற்றி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் போலந்தை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது.
இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.
இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன.
போலந்தை வீழ்த்தி அர்ஜென்டினா மாபெரும் வெற்றி
நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள லூசைல் மைதானத்தில் 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து மற்றும் அர்ஜென்டீனா அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனையடுத்து, 2வது பாதியின் 46வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கோல் அடித்து அசத்தினார்.
இதன் பின்னர், 67வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் மற்றொரு கோலை அடித்தார். இதனையடுத்து, 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
புள்ளி பட்டியலில் அர்ஜென்டினா அணி முதல் இடத்தை பிடித்துள்ளது. 2வது இடத்தை போலந்து அணி பிடித்துள்ளது.
சி பிரிவில் இடம்பெற்றிருந்த அர்ஜென்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. இதனையடுத்து, இருநாட்டு ரசிகர்களையும் இரு அணிகளுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Argentina go through as ??????? of ????? ? with a 2-0 win over Poland. ? #ARG #POL #FIFAWorldCup pic.twitter.com/1OwhQbprK3
— Football Daily (@footballdaily) November 30, 2022
Congratulations to every Messi/Argentina fan who believed we can get two wins despite the loss to Saudi.
— ? ? (@Nkjnr) November 30, 2022
Y’all are the REAL MVP. pic.twitter.com/xgs47wZDkM
Julian Alvarez scored the goal to confirm Argentina's place in the #FIFAWorldCup last-16 in a 0-2 win vs Poland tonight. ??? @ManCity pic.twitter.com/IZxaV7ifyZ
— City Xtra (@City_Xtra) November 30, 2022