அடேங்கப்பா... உலககோப்பை கால்பந்து போட்டியில் வெல்லும் அணிக்கு இத்தனை கோடியா..? - வாயடைத்த ரசிகர்கள்...!

Football FIFA World Cup Qatar 2022
By Nandhini Nov 16, 2022 06:45 AM GMT
Report

உலககோப்பை கால்பந்து போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை வெளியிடப்பட்டுள்ளது. 

கால்பந்து உலக கோப்பை தொடர் -

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.

உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது.

இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. வரும் 20ம் தேதி கத்தார்- ஈகுவடார் அணிகள் இரவு 9.30 மணிக்கு நேருக்கு நேர் மோத உள்ளன.

fifa-world-cup-2022-foot-ball

வெளியான பரிசுத் தொகை

இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு பரிசு தொகை விவரம் வெளியாகியுள்ளது.

2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரூ.3258 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொத்த பரிசு தொகை ரூ.3586 கோடியாகும். இது கடந்த முறையை விட ரூ.328 கோடி கூடுதலாகும்.

சாம்பியன் பட்டத்தை வென்ற அணிக்கு ரூ.342 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.244 கோடியும், 3-வது இடத்தை பிடிக்கும் ரூ.219 கோடியும், 4-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.203 கோடியும், கால் இறுதியுடன் வெளியேறும் 4 அணிகளுக்கும் தலா ரூ.138 கோடியும், 2 வது சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றோடு வெளியேறும் 16 அணிகளுக்கு தலா ரூ.73 கோடியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.