Wow... 6-வது முறையாக குரோஷியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா...! - குவியும் வாழ்த்துக்கள்
உலக கோப்பை கால்பந்து தொடரில் 6-வது முறையாக குரோஷியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அர்ஜென்டினா நுழைந்துள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது.
கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகின்றன.
குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா -
நேற்று நள்ளிரவு லுசைஸ் ஐகானிக் மைதானத்தில் முதலாவது அரைஇறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த இரு அணிகளும் பயங்கரமான பலத்துடன் மல்லுக்கட்டி விளையாடின.இதனால் களத்தில் அனல் பறந்தது. இந்த பரப்பான ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார்.
இதனையடுத்து, வீரர் ஜூலியன் அல்வாரஸ் போட்டியின் 39-வது நிமிடத்தில் 2வது கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக்கு கொண்டுச் சென்றார். 2-வது அரைஇறுதியில் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி முன்னிலை வகித்தது.
இதைத்தொடர்ந்து 9-வது நிமிடத்தில் 2-வது முறையாக ஜூலியன் அல்வாரஸ் தனது அணிக்கான மூன்றாவது கோலை அடித்து அபாரமாக அசத்தினார்.
ஆனால், கோல் அடிக்க முடியாமல் குரேஷியா அணி வீரர்கள் திணறினர். குரேஷியா அணிக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்ட போதும் கூட அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி மாபெரும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
1978, 1986-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அரைஇறுதியில் ஒரு போதும் வீழ்ந்ததில்லை. அந்த பெருமையோடு 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்துள்ளது.
MESSI AND ARGENTINA ARE ONE WIN AWAY FROM LIFTING THE WORLD CUP ?? pic.twitter.com/iNbouUAcE2
— ESPN (@espn) December 13, 2022
Leo Messi has won the most MOTM awards at the 2022 World Cup (4) and the most in World Cup history (10) pic.twitter.com/msrQJyTK7s
— MC (@CrewsMat10) December 13, 2022
?? Messi: World Cup finalist. pic.twitter.com/BRlCje4Lhe
— UEFA Champions League (@ChampionsLeague) December 13, 2022