சட்டமன்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் இடையே கடும் வாக்குவாதம்..!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு உறுபினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஓ.பன்னீர் செல்வம் பேச்சால் வாக்குவாதம்
ஆன்லைன் தடை மசோத மீது ஓ.பன்னீர் செல்வம் உரையாற்றினார். அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆன்லை சூதாட்ட தடை சட்டத்தை இந்த மன்றம் விவாதமின்றி ஏன மனதாக நிறைவேற்றி இருக்கலாம்.
இங்கே பல்வேறு விவாதங்கள் நடைபெற்று இருக்கிறது. இருப்பினும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக முழுமையாக வரவேற்பதாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு
ஓபிஎஸ் அதிமுக என்று குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஒரு கட்சிக்கு ஒருவர் வீதம் என்று பேச அழைத்தீர்கள்.
அதிமுக என்பது எங்களுடைய அணியைச் சேர்ந்தது நான் தான் எதிர்க்கட்சி தலைவராக இருகிறேன். எங்களுடைய சார்பாக தளவாய் சுந்தரம் பேசினார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி அளித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
கடும் வாக்கு வாதம்
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு ஓபிஎஸ் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் அவர் பேச அனுமதி கேட்டார். அதற்காக அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் இடையே பயங்கர வாக்கு வாதம் ஏற்பட்டது.