உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம்
நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் மாற்றங்கள் நடக்கிறது என்றால் அதை நாம் சில முக்கிய அறிகுறிகள் வழியாக அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு சில பிரச்னைகளை ஆரம்பத்திலே நாம் தெரிந்து கொண்டு மருத்துவரை அணுகும் பொழுது எதிர்காலத்தில் வர இருக்கக்கூடிய மிகப்பெரிய பாதிப்பிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அப்படியாக, நம் உடலில் என்ன அறிகுறிகள் வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
1. உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால் உங்களுடைய உடலுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதின் வெளிப்பாடாகும். அதே நேரத்தில் உங்களுடைய தூக்கம் இன்மையும் அதிகம் கொட்டாவி வர காரணமாக இருக்கலாம்.

2. சில நேரங்களில் நம்முடைய அஜீரணம் அல்லது வயிற்று பிரச்சனை காரணமாக வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. உணவு பழவழக்கத்தை மாற்றினால் நன்மை உண்டாகும்.
3. திடீர் என்று விரல்கள் மரத்துப்போவது நரம்பு செயல்பாட்டில் மாற்றம் நடப்பதை காட்டுகிறது. அதே போல் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும் இந்த அறிகுறிகள் வரலாம்.
4. எப்பொழுதும் சோர்வாக காணப்படுகிறீர்கள் என்றால் உங்களுடைய உடலில் வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிடுவதும் சத்தான உணவுகள் எடுத்துக் கொள்வதும் அந்த சோர்வை போகிறது. தொடர்ந்து சோர்வு அதிகரித்தால் நிச்சயம் ஒரு நல்ல மருத்துவரை அணுக வேண்டும்.
5. ஒரு சிலருக்கு திடீர் என்று அதிக அளவில் முடி உதிர்வதை காணமுடியும். இது நம்முடைய உடலில் இரும்புச் சத்து குறைவதால் ஏற்படக்கூடியதாக இருக்கிறது. அதனால் இரும்புச்சத்து அதிகம் இருக்கக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது உடல் ஆரோக்கியம் சீராகி முடி உதிர்வை தடுக்கிறது.

6. கண்களில் வெள்ளைப் பகுதி மஞ்சளாக மாறுவது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாக இருக்கிறது. இது பெரும்பாலும் ஈரல் செயல்பாட்டில் பிரச்சனை இருப்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
7. ஒரு சிலருக்கு திடீர் என்று கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுவத்தை நாம் காணலாம். அது அவர்களுடைய உடலில் நீர் தேக்கம் இருப்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. சமயங்களில் இதயம் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் தொடர்பாகவும் இருக்கலாம். ஆதலால் உடனடியாக நாம் மருத்துவரை அணுகுவது நல்லது.
8. அதேபோல் பல் துலக்கும் பொழுது ஈறுகளில் ரத்தம் வருவது நம்முடைய உடலில் வைட்டமின் சி குறைபாட்டை குறிக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது அவை சீராகும்.