தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக... யாருக்கு ஆதரவு? வெளிப்படையாக அறிவிக்கப்போகும் ரஜினி
வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் அறிவிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் 1996ம் ஆண்டு முதல் சில தேர்தலில் யாருக்கு ஆதரவு என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.
இந்த தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிடுவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, தன்னுடைய உடல்நலனை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் தன்னுடைய ஆதரவு யாருக்கு என வெளிப்படையாக அறிவிக்க இருக்கிறாராம்.
இதுபற்றி ரஜினியின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், தன்னுடைய நாயக பிம்பத்தை உடைத்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட காத்திருப்பதாகவும், 6ம் தேதிக்கு முன்னால் வெளிப்படையாக அரசியல் பேச உள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும் சில குறிப்புகள் மூலம் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என தன்னுடைய ரசிகர்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.