குழந்தைகள் முதியோர்களிடம் அதிகரிக்கும் காய்ச்சல்.. தடுப்பூசி போட அறிவுறுத்தும் மருத்துவர்கள்

Cold Fever Flu
By Sakthi Raj Aug 28, 2026 06:39 AM GMT
Report

தமிழகம் முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாசப் பாதை தொற்று நோய்க்கு உள்ளாக கூடிய எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் இணை நோயாளிகள் எளிதில் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அதனை தடுப்பதற்கு முக கவசம், தடுப்பூசி அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

இந்தத் தொற்று தொடர்பாக டாக்டா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது:

ஆா்எஸ்வி எனப்படும் சுவாச பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா சாா்ந்த பிரச்சினைகளில் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அதிகம் பாதிக்கிறது. இதனுடைய அறிகுறியாக மூச்சு திணறல் காய்ச்சல் இருமல் தொண்டை வலி, சோர்வு உடல் வலி சளி வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவையாக உள்ளது.

1 1/2 வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்

1 1/2 வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்

குழந்தைகள் முதியோர்களிடம் அதிகரிக்கும் காய்ச்சல்.. தடுப்பூசி போட அறிவுறுத்தும் மருத்துவர்கள் | Fever Rising Children Elderly Vaccination Advised

தேவைப்படுபவர்கள் எக்ஸ்ரே, சளி பரிசோதனை, ரத்த பரிசோதனை மேற்கொண்டு நிமோனியா அல்லது வேறு எதுவும் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

மேலும், சுவாச பாதையை விரிவு செய்யும் மருந்துகள் இருமலை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை மருத்துவரின் பரிந்துரையால் எடுத்துக் கொள்வது அவசியம், முதியவர்கள் இணை நோயாளிகள் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது நிச்சயம் முக கவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பாக இருக்கும்.

குழந்தைகள் பாதிப்பு:

பொதுவாகவே, பருவநிலை மாற்றம் அடையும் பொழுது நமக்கு காய்ச்சல், சளி தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பு போன்ற தொற்றுகள் உருவாகும். அந்த வகையில், நிகழாண்டிலும் கடந்த சில நாள்களாக ஆா்எஸ்வி, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் அதிகரித்து வருகிறது.அதேசமயம், டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான குழந்தைகளும் மருத்துவமனைக்கு அதிகம் வருகிறார்கள்.

ஒரு சில இடங்களில் சால்மோனெல்லா டை‘ஃ‘பி பாக்டீரியா மூலம் உருவாகும் டைபாய்டு காய்ச்சலும் பரவி வருகிறது. இவ்வாறான பாதிப்புகளை குறைப்பதற்கு காய்ச்சிய நீரையே குழந்தைகளுக்கும் கொடுப்பது நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும், முடிந்தவரை வீடுகளில் கொசுக்கள் சூழாதவாறு முழுமையான ஆடைகள் அணிவது அவசியம்.

இந்த காலகட்டங்களில் தரமற்ற உணவுகள் கடைகளில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு போடக்கூடிய தடுப்பூசி தவணைகளை நாம் எப்பொழுதும் தவற விடக்கூடாது. கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும்.

நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய்

நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழ்நாட்டு பயணிகள் - 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பும் முதல்வர் விஜய்

குழந்தைகள் முதியோர்களிடம் அதிகரிக்கும் காய்ச்சல்.. தடுப்பூசி போட அறிவுறுத்தும் மருத்துவர்கள் | Fever Rising Children Elderly Vaccination Advised

எந்தத் தடுப்பூசி அவசியம்?

பருவ காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது மிக மிக அவசியம். நிமோனியா காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஊக்கத்தவனையாக நிமோகாக்கல் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

குடிநீா் மாசுபாட்டால் ஏற்படும் கல்லீரல் அழற்சியைத் தடுக்க ஹெபடைடிஸ் ஏ தடுப்பூசியும், டைபாய்டு தடுப்பூசியும் மருத்துவரின் பரிந்துரைப்படி செலுத்திக் கொள்ளலாம். 1,558 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை 1558 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே ஜி அருள்ராஜ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

சென்னையில் ஹெச்1என்1 பாதிப்பு அச்சுறுத்தும் அளவு இல்லை. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சுமார் 1288 பேர் பாதிக்கப்பட்டனர். தற்பொழுதிய ஆண்டில் எண்ணிக்கை 1558 ஆக உள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் இது குறித்து பயப்பட தேவையில்லை. அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

வழிகாட்டு நெறிமுறைகள்:

இன்ஃப்ளூயன்ஸா தொற்று குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட வழிகாட்டுதலில், ஒருவருக்கு காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களின் ஆலோசனை இன்றி எந்த ஒரு மருந்துகள் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும், எந்த காய்ச்சலுக்கு என்ன அறிகுறிகள் என்பதை பற்றி பார்ப்போம்.

குழந்தைகள் முதியோர்களிடம் அதிகரிக்கும் காய்ச்சல்.. தடுப்பூசி போட அறிவுறுத்தும் மருத்துவர்கள் | Fever Rising Children Elderly Vaccination Advised

 1. நோய் -டெங்கு அறிகுறிகள்:

டெங்கு இருப்பவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி, உடலில் சிவப்பு தடிப்புகள் வரலாம். மருத்துவ சிகிச்சை இரண்டாம் நாளுக்கு பிறகு ரத்த பரிசோதனை, நீர் பலச்சாறு, இளநீர், உப்பு, சர்க்கரை கரைசல் அதிகமாக பருக வேண்டும். மேலும், ரத்த ரத்த தட்டணு அளவை கண்காணிப்பது அவசியம். ஓய்வு எடுத்துக் கொள்வது பரிந்துரை இல்லாமல் தேவையில்லாத மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

2. நோய் - இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள்:

இந்த நோய் இருப்பவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, வீக்கம், தலைவலி ஆகிய அறிகுறிகள் இருக்கும். சுயமாக எந்த மருத்துவமும் செய்ய வேண்டாம். காய்ச்சிய நீரையே பருக வேண்டும். மருத்துவ பரிந்துரைத்த காலம் வரை அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம். நல்ல ஓய்வு, உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க வேண்டும். இருமல் தும்மலின் போது கைகுட்டையால் மூடிக்கொள்வது அவசியம்.

3. நோய் - ஆா்எஸ்வி (சுவாசத் தொற்று) அறிகுறிகள்:

இந்த தொற்று இருப்பவர்களுக்கு காய்ச்சல் இருக்கும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். சளி இருமல் பசியின்மை ஆகிய அறிகுறிகள் காணப்படும். முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவிக்கொள்ளுதல் சுவாச சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுதல் ஆரோக்கியமான உணவு நல்ல தூக்கம் புகைப்பழக்கத்தை கைவிடுதல் அதிகமான நீர் எடுத்துக் கொள்வது அவசியம்.

4. நோய் - டைபாய்டு அறிகுறிகள்:

கடுமையான காய்ச்சல் இருக்கும். பசியின்மை தலைவலி மற்றும் வயிற்று வலி உடலில் தடிப்புகள் ஆகிய அறிகுறிகள் காணப்படும். சுகாதாரமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் காய்ச்சிய குடிநீர் எடுத்துக் கொள்ள வேண்டும். கைகள் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12