தொடங்கியது சித்திரை திருவிழா, ஆனால் பக்தர்கள் சோகம்: காரணம் என்ன?
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் பங்கேற்றனர்.

கொடியேற்று விழாவை ஒட்டி நேற்று முன் தினம் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. இந்த சித்திரை பெருவிழாவில் 18 நாட்களிலும் காலையில் திருமுறை விண்ணப்பம், மாலையில் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. கிட்டதிட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நடைபெற்று வந்தது.
தஞ்சாவூரில் இத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பெரும் திருவிழாவாக இருந்து வந்தது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகத் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பக்தர்கள் சோகத்தில் உள்ளனர்.