இனி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கபட்டன.

வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சுழற்சி முறையில் இனி அனைத்து வாரங்களிலும் சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெறும். ஞாயிறு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகள் அரசு விடுமுறை நாட்கள் மேலும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை நாளாகும் இதனையடுத்து இடையில் உள்ள சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்பாக இருந்தது.

அந்த இடைப்பட்ட ஒரு தினத்தை மட்டும் விடுமுறையாக அறிவிக்கக் கோரி பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமை (அக்.16) விடுமுறை அளிப்பதாக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

You May Like This


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்