மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? சென்னையில் பேருந்துகள் நிறுத்தமா?
ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகலில் கரையை கடக்க உள்ளது.
ஃபெஞ்சல் புயல்
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று (29.11.2024) பிற்பகல் 2.30 மணிக்கு ஃபெஞ்சல் புயல் உருவானது. இந்த புயல் 15 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.
இந்த புயலானது இன்று(30.11.2024)பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது.
விடுமுறை
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுவையில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறுத்தம்
மேலும், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஐடி நிறுவனங்களை ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர் மற்றும் இ.சி.ஆர் சாலையில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மற்ற பகுதிகளில் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் பூங்கா உட்பட பிற பூங்காக்கள், கடற்கரைகள் மூடப்பட உள்ளது.பொதுமக்கள் கடற்கரை அருகே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.