மார்பக புற்றுநோய் - முன்னாள் பெமினா மிஸ் இந்தியா திரிபுரா ரிங்கி சக்மா காலமானார்!
ரிங்கி சக்மா
பெமினா மிஸ் இந்தியா திரிபுரா 2017 பட்டம் பெற்ற ரிங்கி சக்மா (28) காலமானார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆரம்பகட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
ஆனால் புற்றுநோய் ரிங்கி சக்மாவின் நுரையீரல் மற்றும் மூளைக்கு பரவி மூளையில் கட்டிக்கு வழிவகுத்தது. இதனையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த மாதம் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது நுரையீரல் ஒன்று கிட்டத்தட்ட செயல்படாமல் இருந்ததால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
உயிரிழப்பு
இந்நிலையில் ரிங்கி சக்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த தகவல் மிஸ் இந்தியாவின் சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 மிஸ் இந்தியா போட்டியின் போது ரிங்கி தனது சமூகத்திற்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் போட்டியிட்டதால் அவருக்கு மிஸ் கான்ஜினியலிட்டி மற்றும் பியூட்டி வித் எ பர்பஸ் ஆகிய 2 துணை தலைப்புகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.