30 முறைக்கும் மேல்..17 வயது கைதியிடம் அத்துமீறல் - சிக்கிய பெண் பிசியோதெரபிஸ்ட்
சிறுவனை, பெண் பிசியோதெரபிஸ்ட் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
சிறுவனிடம் அத்துமீறல்
அமெரிக்கா, ஐலேண்ட் பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இதில் அடைக்கப்பட்ட 21 வயது கைதி ஒருவர், பிசியோதெரபி சிகிச்சை அளிக்க வரும் மாயா ஹேயஸ் (47) என்ற பெண்ணுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகாரளித்துள்ளார்.
2021ல் இந்த காவல் மையத்திற்கு 17 வயது சிறுவனாக இருக்கும்போது அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது இவருக்கு பிசியோதெரபிஸ்ட், கவுன்சிலிங் வழங்க பலமுறை சென்றுள்ளார். பின் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். 30-க்கும் மேற்பட்ட முறை அத்துமீறியுள்ளார்.
பெண் கைது
சிறுவனின் நிலையை பயன்படுத்தி கொண்டு, பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஹேயஸை கைது செய்துள்ளனர்.
ஆனால் குற்றத்தை ஹேயஸ் மறுத்துள்ளார். தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.