கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடிச் சென்று உதவிய பெண் உதவி காவல் ஆய்வாளர் - வைரலாகும் வீடியோ

Tamil Nadu Police Tirunelveli
By Thahir Apr 17, 2023 10:34 AM GMT
Report

நெல்லை ரயில் நிலையத்தில் மூச்சு வாங்க கையில் குழந்தையுடன் நடந்து வந்த பெண்ணுக்கு உதவி காவல் ஆய்வாளர் ஓடிச் சென்று உதவிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓடிச் சென்று உதவிய பெண் SI

நெல்லை ரயில் நிலையத்தில் நடைமேடை 1-ல் நெல்லை சந்திப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுவாதிகா சக காவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது கர்ப்பிணி பெண் ஒருவர் கையில் சூடகேஸை இழுத்துக் கொண்டும் மற்றொரு கையில் குழந்தையுடன் நடைமேடை இரண்டில் இருந்து 1வது நடைமேடைக்கு நடந்து வந்துள்ளார். இதை பார்த்த பெண் உதவி காவல் ஆய்வாளர் சுவாதிகா ஓடிச் சென்று குழந்தையை துாக்கி கொண்டு வந்தார்.

female sub-inspector who helped a pregnant woman

குவியும் பாராட்டுக்கள் 

கொளுத்தும் வெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடிச் சென்று உதவிய பெண் உதவி காவல் ஆய்வாளரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

female sub-inspector who helped a pregnant woman

இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சுவாதிகாவை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.