எந்த சூழலிலும் தற்கொலை எண்ணத்திற்கு மாணவிகள் தள்ளப்படக்கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Jul 26, 2022 06:11 AM GMT
Report

அண்மை காலமாக தமிழகத்தில் நடந்த சில நிகழ்வுகள் எனக்கு உள்ளபடியே மனவேதனையாக இருக்கிறது.

மாணவர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் 

குருநானக் கல்லுாரியின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,அண்மை காலமாக தமிழகத்தில் நடந்த சில நிகழ்வுகள் எனக்கு உள்ளபடியே மனவேதனையாக இருக்கிறது.

M.K.Stalin

கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக கல்வி சேவையாக கருத வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர், மாணவர்கள் பட்டங்கள் பெறுவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரல. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி, ஆகியவற்றை அவர்களுக்கு நீங்க அளிக்க வேண்டும்.

எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழ்நாட்டு மாணவர்கள் வளர வேண்டும்.

உங்களுக்கு ஏற்படக் கூடிய தொல்லைகள், இடையூறுகள், அவமானங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அதிலும் குறிப்பாக மாணவிகள் எதிர்கொள்ள வேண்டும்.

"பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா மோதி மிதித்து விடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா" என்ற மகாகவி பாராதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார்.

மாணவிகளுக்கு மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ..தொல்லை தரக் கூடிய இழிவு செயல் நடந்தால் தமிழக அரசு நிச்சயம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்று தருவோம். எந்த சூழலிலும் தற்கொலை எண்ணத்திற்கு மாணவிகள் தள்ளப்படக்கூடாது.

சோதனைகளை சாதனைகளாக்கி வளர்ந்தாகனும்.தமிழக மாணவ, மாணவிகள் அறிவு கூர்மை வாய்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் உடல் உறுதியும், மன உறுதியும் கொண்டவர்களா வளரனும் இது தான் என்னுடைய ஆசை என்னுடைய கனவு .

மாணவ செல்வங்களே தற்கொலை எண்ணம் கூடாவே கூடாது தலை நிமிரும் எண்ணம் தான் இருக்கணும். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை கூடாது.

உயிர்பிக்கும் சிந்தனையே தேவை. ஆசிரியர்களாக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் மாணவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும்.

மாணவர்கள் உங்களுக்கு உள்ள பிரச்சனையை ஆசிரியர்களிடமும், பெற்றோரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பேசினார்.