தேர்தல் பணியில் இருந்த பெண் காவலர் லாரி மோதி பலி - வேலூரில் சோகம்

police election dead vellore
By Jon Apr 05, 2021 01:04 PM GMT
Report

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரக் 6-ம் தேதி நடைபெற உள்ளன. இதற்கான பிரச்சாரங்கள் ஏப்ரல் 4-ம் தேதி மாலை நிறைவடைந்தன. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு வேலூரில் அதிகாரிகள் பணியில் இருந்தபோது ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி.கே.புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் குடியாத்தம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற லாரி பறக்கும் படையினரின் கார் மீது நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.இதில் லாரி ஓட்டுனர் தப்பி ஓடினர்.

தேர்தல் பணியில் இருந்த பெண் காவலர் லாரி மோதி பலி - வேலூரில் சோகம் | Female Police Officer Election Duty Killed Vellore

காரில் இருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய பெண் காவலர் மாலதி (40) சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த மற்ற மூவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். மாலதியின் உடலை மீட்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் DIG காமினி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கே.வி.குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.