பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை - இன்ஸ்பெக்டரின் மகன் செய்த கொடூரம்
பெண் காவலரை இன்ஸ்பெக்டரின் மகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பெண் காவல் ஆய்வாளர்
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அனிதா யாதவ் என்பவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பாதிக்கப்பட்ட பெண் காவலரை கான்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்து வந்துள்ளார்.
அப்போது அனிதாவின் மகன் நவ்நீத் அந்த பெண் காவலருக்கு அறிமுகமாகியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
ஒரு நாள் அனிதா வீட்டில் இல்லாத போது பெண் காவலரை வீட்டிற்கு அழைத்து வந்து போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து அனிதாவிடம் அந்த பெண் காவலர் தெரிவித்த போது, நவ்நீத்துடன் திருமணம் செய்து வைப்பதாக உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, திருமண ஏற்பாடுகளுக்கு பணம் வேண்டுமென அந்த பெண் காவலரின் பெயரில் அனிதா யாதவ் ரூ.15 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
அந்த பெண் காவலர் இரு முறை கர்ப்பமான பிறகும் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளார். நவ்நீத் அந்த பெண் காவலரை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததோடு, ஆசைக்கு இணங்கவில்லையெனில், அவரது ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக நவ்நீத் மிரட்டியுள்ளார்.
கடைசிவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்த நிலையில், அந்த பெண் காவலர் இது குறித்து, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை உறுதிப்படுத்திய காவல்துறையினர, காவல் ஆய்வாளர் அனிதா யாதவ் மற்றும் அவரது மகன் நவ்நீத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.