சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்: அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி தூக்கிட்டு தற்கொலை

salem patientsuicide
By Petchi Avudaiappan Nov 12, 2021 06:41 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ஓமலூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ஒண்டி வீரனூர் கிராமம் பாரதிபுரத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மனைவி பாப்பாத்தி வயிற்று பிரச்னை மற்றும் காய்ச்சலுக்காக ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.   

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனை கழிவறையில் பாப்பாத்தி தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலைச் சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.