முதல்வரிடம் கண்ணீர் விட்டழுத பெண் எம்எல்ஏ
சட்டப்பேரவை தேர்தலில் தனக்கு சீட் வழங்காதது குறித்து முதல்வரிடம் முறையிட்ட பெண் எம்எல்ஏவான பரமேஸ்வரி முருகனுக்கு ஆறுதல் கூறினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் உற்சாக வரபேற்பு கொடுத்தனர்.
அப்போது திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற பரமேஸ்வரி முருகனுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படாமல் முன்னாள் அமைச்சரான பரஞ்சோதிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானநிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு அளித்த பரமேஸ்வரி முருகன், தனக்கு சீட் வழங்காதது குறித்து கண்ணீருடன் பேசினார்.
அதாவது, தனக்கு சீட் வழங்கினாலும், வழங்காவிட்டாலும் முதல்வருக்கு நன்றியுடன் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்ட முதல்வர் பரமேஸ்வரி முருகனுக்கு ஆறுதல் கூறினாராம்.