தலிபான் தலைவரை கெத்தாக பேட்டி எடுத்த பெண்: வேறு நாட்டிற்கு அகதியாக செல்லும் அவலம்- காரணம் என்ன?

Afghanistan Female journalist Taliban leader
By Irumporai Aug 31, 2021 06:31 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் பிறகு தற்போது தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் மீண்டும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது .

ஆனால் தலிபான்களோ தாங்கள் திருந்திவிட்டதாகவும், பெண்களுக்கு உரிமை வழங்குவோம் எனவும் தெரிவித்தனர். இந்த நிலையில் தலிபான் தலைவர்களில் ஒருவரான மவுலவி அப்துல்லா ஹேமத்தை பெண் பத்திரிகையாளரான பேஹஸ்டோ அர்கான்ட் நேர்காணல் எடுத்தார்.

அப்போது கடந்த முறையைப் போல் காபூலில் வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்யும் திட்டம் ஏதும் இருக்கிறதா என்று தைரியமாக அர்கான்ட் கேள்வி கேட்க, அதற்கு மவுலவி அப்துல்லா இல்லை என சொன்ன வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டானது.

தலிபான் தலைவரை கெத்தாக  பேட்டி எடுத்த பெண்: வேறு நாட்டிற்கு அகதியாக செல்லும் அவலம்- காரணம் என்ன? | Female Journalist Behesta Leader Afghanistan

ஆனால் தற்போது சோகமான செய்தி என்னவென்றால் அவர் தாயகத்திலிருந்து வேறு நாட்டிற்கு அகதியாக சென்றுவிட்டார். ஆப்கானியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற இன்றே கடைசி நாள் என்பதால் அவர் நேற்றே வெளியேறிவிட்டார்.

ஆப்கனில் பெண்களுக்கான பாதுகாப்பு சூழல் மேம்பட்டால் நான் திரும்புவேன். தலிபான்கள் ஆட்சிக்கு அஞ்சி லட்சக்கணக்கான மக்களைப் போல் நானும் என் தாய்நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என அவர் கூறியுள்ளார்.