சிறையில் கைதிகளுடன் உல்லாசம்; கள்ளத்தொடர்பு அம்பலமானதால் பெண் காவலர்கள் பணி நீக்கம்
சிறை கைதிகளுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த 18 பெண் போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கைதிகளுடன் பெண் போலீசார் உல்லாசம்
பிரபல ஆங்கில பத்திரிக்கையான தி மிரர் (The Mirror) தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக சிறையில் பெண் போலீசார் கைதிகளுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்ததை அம்பலப்படுத்தியுள்ளது.
லண்டனில் எச்எம் பிரிசன் பெர்வ்யின் என்ற மிகப் பெரிய சிறைச்சாலை ஒன்று உள்ளது. இங்கு சிறையில் உள்ள கைதிகளுடன் பெண் காவலாளிகள் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
அதில் ஜெனிவர் கவன் எனற பெண் காவலர், கொள்ளையன் ஒருவனுக்காக சிறைச்சாலைக்குள் ஒரு தொலைபேசியைக் கொண்டு வர ரூ.15,000 (£150) லஞ்சமாக பெற்றுள்ளார்.
அதன் பிறகு இருவரும் வாட்ஸ் அப்பில் உல்லாசமாக செய்திகளை அனுப்பியதாக கையும் களவுமாக பிடிபட்டனர்.
இது குறித்து சிறை அதிகாரி மார்க் ஃபேர்ஹர்ஸ்ட் கூறுகையில், தகுதியற்ற மற்றும் தீய பழக்கம் உடைய நபர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக கவலை தெரிவித்தார்.