பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேர் கைது..!
வேலூரில் பெண் மருத்துவர் ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு சிறார்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே கடந்த 19-ம் தேதி இரவு இரண்டு வாலிபர்கள் குடி போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இருந்த போது அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அவர்கள் தாங்கள் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து முழு கஞ்சா போதையில் இருந்த இரண்டு பேரையும் சத்துவாச்சாரி காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின்பது அவர்கள் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு காதல் ஜோடியை ஆட்டோவில் கடத்தி பணம் நகை வழிப்பறி செய்ததாகவும், பின்னர் ஆண் நண்பருடன் வந்த அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் அடிப்படையில்,
வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சத்துவாச்சாரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், மணிகண்டன், சந்தோஷ் மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.