தமிழக முதல்வரை எதிர்த்து களமிறங்கும் அந்த பெண் போட்டியாளர் யார்? திமுகவின் பலே திட்டம்
தற்போதைய தமிழக முதல்வரான பழனிசாமி, இடைப்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த தேர்தலில், 98,703 வாக்குகளுடன் வெற்றி பெற்றார் பழனிசாமி, அதே தேர்தலில் இரண்டாவதாக வந்த பாமக-வுக்கு 56,681 வாக்குகளும், திமுக-வுக்கு 55,189 வாக்குகளும் கிடைத்தன. தன்னுடைய தொகுதி மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளதால் இந்த முறையும் பழனிசாமி வெற்றி பெறுவது உறுதி என கூறப்படுகிறது.
எனவே இவருக்கு போட்டியாக யாரை களமிறக்கலாம் என திமுக பலத்த யோசனையில் இருந்ததாம். அப்போது அவர்கள் மனதில் தோன்றியவர் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளரான செல்வ கணபதி, இவரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என யோசித்தாலும், சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றிருக்கிறார்.
எனவே இவரது மனைவியான பாப்புவை போட்டியிட வைக்கலாம் என ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதை அத்தொகுதி தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள அவரிடம் விருப்ப மனு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.