எதிர்ப்பை மீறி வேட்பு மனு தாக்கல் செய்த பெண் வேட்பாளர்: பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறை
ஆம்பூர் அருகே மலை கிராம மக்கள் எதிர்ப்பை மீறி வேட்பு மனுவைதாக்கல் செய்த பெண் வேட்பாளர் இந்துமதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிகுட்பட்ட காமனூர்தட்டு, சீக்கஜோனை உள்ளிட்ட மலை கிராமங்களில் பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த 2889 வாக்காளர்களும், பொதுப்பிரிவினர் 551 வாக்காளர்கள் என 3440 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மலை கிராம மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இட ஒதுக்கீடு அளித்து வந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவருக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவியை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இதற்கு மலை கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த ஊராட்சியில் வாக்கு உரிமை இல்லாத இந்துமதி என்ற பெண் நேற்று அவசர அவசரமாக மாதானூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது கிராம மக்கள் துரத்திசென்றுள்ளனர் ஆனாலும் சாமர்த்தியமாக சுதாரித்து கொண்டு தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்இந்துமதி .
இந்த நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி வேட்பு மனு தாக்கல் செய்த இந்துமதி ஆம்பூர் அடுத்த பெரியாங் குபோம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.
தற்போது இந்துமதிக்கு எந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அவர் தங்கி உள்ள வீட்டு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இரண்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.