திருமண தோற்றத்தில் பெண் பாடி பில்டர் .. இணையத்தில் வைரலாகும் போட்டோ -யார் இவர்?
காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து பெண் பாடி பில்டர் திருமண தோற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா
கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரபல பாடிபில்டர் சித்ரா புருஷோத்தம். இவர் உடற்பயிற்சி மற்றும் ஃபேஷனில் பல பட்டங்களை வென்றுள்ளார். சமீபத்தில் பாடிபில்டர் சித்ரா புருஷோத்தம் தனது நீண்டகால காதலர் கிரண் ராஜை திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது திருமணப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், பாடிபில்டர் சித்ரா புருஷோத்தம் காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் மணப்பெண் கோலத்தில் இருக்கிறார்.மேலும் கட்டுக்கோப்பான உடல் அமைப்பைக் கொண்டுள்ளார்.
பாடி பில்டர்
மணப்பெண் கோலத்தின் தோற்றத்திற்கு மாறாக அழகு மற்றும் உடல் வலிமையைப் பட்டுச் சேலையில் வெளிப்படுத்தியுள்ளார்.இந்த தனித்துவமான தோற்றம் இன்ஸ்டாகிராமில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இப்போது அவர் பாடிபில்டர் பெண் பாகுபலி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.மேலும், அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.