மதுரையில் பெண் அதிமுக வேட்பாளர் கடத்தல்?
அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்தி வைத்துள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் ஒன்பதாவது வார்டு அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்தி வைத்து வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாக கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 18 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
9வது வார்டில் தி.மு.க., சார்பில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கிருஷ்ணவேணியும், அ.தி.மு.க., சார்பில் இந்திராணியும் நேரடியாக போட்டியிடுகின்றனர்.
திமுகவினர் வேட்பாளரை போட்டியின்றி அன்னபோஸ்ட் ஆக தேர்வு செய்ய அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்தி வைத்துள்ளதாகவும் வாபஸ் வாங்க சொல்லி,
மிரட்டுவதாகவும் கூறி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அக்கட்சியினர் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்