சமூக வலைதள நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்த மத்திய அரசு: என்னென்ன கட்டுப்பாடுகள்

media social federal
By Jon Mar 03, 2021 05:41 PM GMT
Report

சமூக வலைத்தளங்களில் ஆபாசமான புகைப்படங்கள், தகவல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அது நீக்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறை விதித்துள்ளது. சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் விதிமுறைகளை வெளியிட்டனர்.

அதன்படி, இந்தியாவில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 53 கோடியாகவும் யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 44.8 கோடியாக உள்ளது. இதில் ஃபேஸ்புக் 41 கோடியும் இன்ஸ்டாகிராம் 21 கோடியும் ட்விட்டர் 1.75 கோடியாகவும் உள்ளது. இந்த தளங்களில் ஆபாசமான புகைப்படங்கள், தகவல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அது நீக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், சமூக வலைதள நிறுவனங்களும் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது குறித்த ச விரிவான தகவல்களை வழங்க வேண்டும் என்றும்புகார்களை கையாள்வதற்காக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பக்கூடிய முதல் நபர் யார் என்ற விஷயங்களை கட்டாயம் கண்டறிய வேண்டும்.

அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை கிடைக்கும் வழக்குகளாக எடுத்துக்கொள்ளப்படும். அரசோ அல்லது நீதிமன்றமோ அதுகுறித்த தகவல்களை கேட்டால் நிச்சயம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.