பிப்.15 முதல் மாணவர்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்யலாம்- தென்னக ரயில்வே
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை புறநகர் ரயில் சேவை , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அனுமதி கொடுக்கபட்ட நிலையில், தற்போது பெண்கள் மற்றும் மாணவிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
காலை 7.30 – 9 மணி வரையிலும், மாலை 4.30 – 8 வரையிலும் மாணவர்களுக்கு ரயில்களில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான நேரக் கட்டுப்பாட்டை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி பிப்.15 முதல் மாணவர்கள் நேரக் கட்டுப்பாடு இன்றி ரயில்களில் பயணிக்கலாம் என்றும் டிக்கெட் பரிசோதகரிடம் மாணவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் பயணச் சீட்டை காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.