ஆட்டம் காட்டும் தங்கம் விலை - இன்றைய ரேட் இதுதான்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (பிப்.28) விலை அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815-க்கும், சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் கிராமிற்கு 0.30 பைசா உயர்ந்து ரூ.75.70க்கும், கிலோ வெள்ளி ரூ.300 உயர்ந்து ரூ.75,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை IBC Tamil
ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள் IBC Tamil