மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 28ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முழு முனைப்புடன் போராடி வருகிறது தேசிய ஜனநாயக கூட்டணி.
இக்கூட்டணியில் அதிமுக, அமமுக, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக இணைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், 28-ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசவுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.