வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (பிப்.24) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,820-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,560-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.76.40க்கும் ஒரு கிலோ ரூ.76,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.