வன்முறையை தூண்டும் விதமாக ஸ்டேட்டஸ் வைத்தால் புகார் கொடுக்கலாம் : வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்
வன்முறையினை தூண்டும் விதமாக வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டால், பயனர்கள் புகார் அளிக்கும் வசதியினை மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் புதிய அறிமுகம்
வாட்ஸ் அப் இன்று பலகோடி மக்கள் பயன்ப்டுத்தும் செயலி, வாட்ஸ் ஆப் நிறுவனம் பயனர்களை கவரும் வகையில் புதிய அம்சங்களை தற்போது அறிமுகம் செய்து வருகின்றது.

அந்த வகையில் வன்முறையினை தூண்டும் விதமாக வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டால், இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புகார் அளிக்கும் வசதியினை வாட்ஸ் ஆப் அறிமுகபடுத்தியுள்ளது.
இனி புகார் செய்யலாம்
அதன்படி வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் தனி நபர்களை தரக்குறைவாக விமர்சிப்பது, பெண்களை அவதூறாக சித்தரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் புகார் செய்யலாம் என மெட்டா தெரிவித்துள்ளது.
அதன்படி வரக்கூடிய புகார்கள் வாட்ஸ் ஆப் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு , தொடர்புடைய ஸ்டேட்டஸ் நீக்கப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது.