டிரம்பின் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம்: எச்சரிக்கும் FBI
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதை எதிர்த்து, டிரம்பின் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவின்புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது.
ஜனவரி 20-ம் தேதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பதற்க உள்ளனர். இதனை எதிர்க்கும் வகையில் ஆயுதமேந்திய குழுக்கள், வாஷிங்டன் டி சி உட்பட முக்கிய நகரங்களில் ஒன்று கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் அதிபர் பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் எதிர்வரும் ஜனவரி 17-ம் தேதி தொடங்கி, ஜனவரி 20-ம் தேதியன்று தலைநகர் வாஷிங்டன் டி.சி-யை நோக்கி செல்ல இருப்பதாக டிரம்புக்கு ஆதரவான மற்றும் வலதுசாரியினரின் வலைதளப் பதிவுகளில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜனவரி 16 முதல் 20-ம் தேதி வரை எல்லா மாகாண தலைமையகங்களிலும் போராட்டங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது.
இதனால் அமெரிக்க்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை வலுப்படுத்த உள்ளூர் காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.